புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிப்பு: சுற்றுலா தலங்களை மூடி பாதுகாப்பு அதிகரிப்பு
புதுச்சேரியில் மழை மற்றும் காற்றின் அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் மழை மற்றும் காற்றின் அளவு அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சால் புயல் புதுச்சேரியில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. பெஞ்சால் புயலானது 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இது இன்று மாலை கரையை கடக்க்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.