தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலத்தில் பழமையான ஓலைச் சுவடிகளை பார்த்து ரசித்த தமிழக ஆளுநர்

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலத்தில் பழமையான ஓலைச் சுவடிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 11.30 மணியளவில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார்

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலத்தில் பழமையான ஓலைச் சுவடிகளை பார்த்து ரசித்த தமிழக ஆளுநர்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலத்தில் பழமையான ஓலைச் சுவடிகளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று 11.30 மணியளவில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். இதற்காக சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி மதியம் 12 மணியளவில் தஞ்சாவூர் அரண்மனைக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து அரண்மனையில் வசித்து வரும் மராட்டிய மன்னர்களின் அரச குடும்பத்தினர் வழிபாடு செய்யும் சந்திர மவுலிஸ்வார் சன்னதிக்கு வழிபாடு செய்ய சென்றார்.