“தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பு” - எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

“ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனைமுகமான ராஜ் கௌதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பு” - எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: “ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனைமுகமான ராஜ் கௌதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய பேராசிரியர் ராஜ் கௌதமன் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனைமுகமான ராஜ் கௌதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்.