“அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை; ஏனெனில்...” - எடப்பாடி பழனிசாமி விவரிப்பு

“ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும்.

“அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை; ஏனெனில்...” - எடப்பாடி பழனிசாமி விவரிப்பு

சென்னை: “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் விஜய் தனது கட்சியின் கொள்கைகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். கொள்கை இல்லாத கட்சிகள்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், “அதிமுக சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை,” என்றார்.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாகவுள்ளன. எனவே, அரசு உடனடியாக அந்த காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிர்ப்பப்பட வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழஙக்கப்பட வேண்டும். தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாடும் விதமாக முன்கூட்டிய அவர்களுடைய ஊதியத்தை வழங்க வேண்டும்.