சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தொடங்கிய ரயில் சேவை: பயணிகளின் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) காலை முதல் வழக்கமான மின்சார ரயில் சேவை தொடங்கியது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதால், பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தொடங்கிய ரயில் சேவை: பயணிகளின் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் மார்க்கத்தில் இன்று (அக்.29) காலை முதல் வழக்கமான மின்சார ரயில் சேவை தொடங்கியது. 14 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதால், பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், பார்க் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லாததால், பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274.20 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கியது. இப்பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.