‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட ஐகோர்ட் தடை

தீபாவளியன்று  ரீலீஸ் ஆகவுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: தீபாவளியன்று ரீலீஸ் ஆகவுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சட்டவிரோதமாக 1957 இணைய தளங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டிவிக்களில் வெளியிடாமல் தடுக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.