அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை: நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய அமித்ஷா பதவி விலக வேண்டும், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று (டிச.19) மாலை 3 மணிக்கு அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரை கூறியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசியிருப்பதன் மூலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்து இழிவுபடுத்தியிருக்கிறார். இதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து போராடி வருகிறது. அம்பேத்கர் புகழை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகிறது என்று உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டையும் கூறியிருக்கிறார்.