ஃபெஞ்சல் புயல்: மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது
சென்னை: புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.