புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.