விருதுநகர் மாவட்டத்தில் ‘மணக்கும் மல்லிகை’ சாகுபடி: சென்ட் ஆலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், கட்டங்குடி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அருப்புக்கோட்டை, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.