அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தினகரன் வலியுறுத்தல்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களையும், நோயாளிகளையும் சிரமத்திற்குள்ளாக்கும் சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: “தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொது மக்களையும், நோயாளிகளையும் சிரமத்திற்குள்ளாக்கும் சுகாதாரத் துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40 சதவிகிதமும், புறநகர் மருத்துவமனைகளில் 33 சதவிகிதமும், மகப்பேறு மருத்துவமனைகளில் 25 சதவிகிதமும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், அரசு மருத்துவமனைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அசாதாரண சூழல் நிலவுவதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.