மலைப் பகுதி மக்களுக்காக ரூ.1.60 கோடியில் 25 பைக் ஆம்புலன்ஸ் - தமிழக அரசு உத்தரவு

எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில்  25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள்  ரூ.1.60 கோடி  செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

மலைப் பகுதி மக்களுக்காக ரூ.1.60 கோடியில் 25 பைக் ஆம்புலன்ஸ் - தமிழக அரசு உத்தரவு

சென்னை: எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இரு சக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.