முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு: ஐகோர்ட் கிளை நாளை விசாரணை

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.

முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு: ஐகோர்ட் கிளை நாளை விசாரணை

மதுரை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நாளை (நவ.12) விசாரணைக்கு வருகிறது

சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கஸ்தூரியை கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை திருநகரில் நாடார் மகாஜன சங்கம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில இன்று (திங்கள்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார்.