ஆஜராவதை தவிர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா... அசராத ஆந்திர போலீஸ்!

 சமூக வலைதளத்தில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக அநாகரீகமான முறையில் கருத்து பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், ‘டிஜிட்டல் முறையில் அவர் ஆஜராவார்’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

ஆஜராவதை தவிர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா... அசராத ஆந்திர போலீஸ்!

அமராவதி: சமூக வலைதளத்தில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருக்கு எதிராக அநாகரிகமான முறையில் கருத்து பதிவிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பிய நிலையில், ‘டிஜிட்டல் முறையில் அவர் ஆஜராக அனுமதிக்க வேண்டும்’ என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் குடும்பத்தினர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் அநாகரிமான முறையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து பிரகாசம் மாவட்டம் மட்டிப்பாடு காவல் நிலையத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு நவம்பர் 24-ம் தேதி ஆஜராகுமாறு ராம் கோபால் வர்மாவுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.