ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படாததால் திமுக கூட்டணிக்கு உள்ளேயே பிரச்சினை: தமிழிசை விமர்சனம்
வெளியில் இருந்து யாரும் திமுக கூட்டணிக்குள் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உரிய அங்கீகாரம் தரப்படாததால், கூட்டணிக்குள் அவர்களே பிரச்சினைகளை உருவாக்கி கொள்கின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: வெளியில் இருந்து யாரும் திமுக கூட்டணிக்குள் பிரச்சினைகளை உருவாக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உரிய அங்கீகாரம் தரப்படாததால், கூட்டணிக்குள் அவர்களே பிரச்சினைகளை உருவாக்கி கொள்கின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தனியார் அறக்கட்டளை ஆண்டு விழாவில் தமிழகபாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.