ஒரே நாளில் 2,153 போலீஸார் பணியிடமாற்றம்: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 2,153 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறைத்தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், கலந்து கொள்ளும் காவலர்கள் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும், மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் கோரி மனு அளித்தனர். இதேபோல், டிஜிபி சங்கர் ஜிவால் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வு செல்லும் போதும் காவலர்கள் பலர் மனு அளித்தனர். இந்நிலையில், டிஜிபியிடம் காவலர்கள் அளித்துள்ள மனுக்களில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிபுரியும் 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.