“இந்த ஆண்டு டெங்கு உயிரிழப்பு இல்லாத ஆண்டாக மாற்ற நடவடிக்கை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு உயிரிழப்பு இல்லாத ஆண்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ராஜபாளையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ராஜபாளையம்: தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு உயிரிழப்பு இல்லாத ஆண்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராஜபாளையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.23) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் புதிதாக 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும், முக்கிய நகரங்களில் உள்ள 6 மருத்துவமனைகளை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தவும் ரூ.1018.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டார்.