இலங்கை சிறையிலிருக்கும் 35 நாட்டுப் படகு மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பனில் தர்ணா
இலங்கை சிறையிலிருக்கும் 35 நாட்டுப் படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று பாம்பனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்: இலங்கை சிறையிலிருக்கும் 35 நாட்டுப் படகு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று பாம்பனில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர் அதிலிருந்த 35 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 8-ம் தேதி கைது செய்தனர்.