எம்.ஜி.ஆர் ஆடிய சிவதாண்டவம்! - ஸ்ரீமுருகன்

தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், ‘ஸ்ரீமுருகன்’. 1944-ம் ஆண்டில் அதற்கான விளம்பரம் வெளியானது. பாகவதர் ஒரு வெள்ளைக் குதிரையில் ஸ்டைலாக அமர்ந்திருப்பதைப் போல வெளியாகி இருந்தது அந்த விளம்பரம்.

எம்.ஜி.ஆர் ஆடிய சிவதாண்டவம்! - ஸ்ரீமுருகன்

தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், ‘ஸ்ரீமுருகன்’. 1944-ம் ஆண்டில் அதற்கான விளம்பரம் வெளியானது. பாகவதர் ஒரு வெள்ளைக் குதிரையில் ஸ்டைலாக அமர்ந்திருப்பதைப் போல வெளியாகி இருந்தது அந்த விளம்பரம். பாகவதரின் நண்பரும் இயக்குநருமான ராஜா சந்திரசேகர் இயக்குவதாகவும் கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கதை, வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார்.

அப்போது தியாகராஜ பாகவதரின், ஹரிதாஸ் 3 தீபாவளியாக ஓடி சாதனை படைத்ததால் இந்தப் படத்தில் அவரின் தலையீடு அதிகம் இருந்ததாகச் சொல்வார்கள். வள்ளியாக வசுந்தரா தேவியையும் (வைஜெயந்தி மாலாவின் தாயார்)தெய்வானையாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்யச் சொன்னாராம் அவர். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க டி.ஆர்.ராஜகுமாரி மறுத்துவிட்டார்.