கலைஞர்களை கவுரவிப்பது மகத்தான பணி: சன்மார் குழுமத்தின் தலைவர் புகழாரம்
கலைஞர்களை கவுரவிப்பது மகத்தான பணி என்று டிரினிடி 14-ம் ஆண்டு இசை நாட்டிய விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் சன்மார் குழுமத்தின் தலைவர் என்.குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: கலைஞர்களை கவுரவிப்பது மகத்தான பணி என்று டிரினிடி 14-ம் ஆண்டு இசை நாட்டிய விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் சன்மார் குழுமத்தின் தலைவர் என்.குமார் தெரிவித்துள்ளார். மனிதநேயரும் பரோபகாரருமான எஸ்.எம். முத்துலஷ்மியின் நினைவைப் போற்றும் வகையில் 14-வது ஆண்டு ‘டிரினிடி ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஆஃப் இந்தியா’ விழா நேற்று முன்தினம் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் தொடங்கப்பட்டது.
நவ. 25 வரை பல்வேறு இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்மார் குழுமத்தின் தலைவர் என்.குமார், மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இளம் கலைஞர்களுக்கு பல விருதுகளையும் வழங்கிப் பாராட்டினார்.