அரிட்டாபட்டியில் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்க வலுக்கும் எதிர்ப்பு - பின்புலம் என்ன?

மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நடந்த  ஏலத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் என  சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அரிட்டாபட்டியில் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்க வலுக்கும் எதிர்ப்பு - பின்புலம் என்ன?

மதுரை: மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நடந்த ஏலத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது.