காஞ்சிபுரம் | ரூ.4 கோடி சொத்து சேர்த்த வழக்கு: திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குஜராஜ்(45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட படப்பை பிரிவில் நீர்வளத் துறைஉதவி பொறியாளராக ஏற்கெனவே பணியாற்றியவர்.

காஞ்சிபுரம் | ரூ.4 கோடி சொத்து சேர்த்த வழக்கு: திமுக பெண் கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம்: சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் குஜராஜ்(45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட படப்பை பிரிவில் நீர்வளத் துறைஉதவி பொறியாளராக ஏற்கெனவே பணியாற்றியவர். தற்போது கீழ்பாலாறு வடிநிலக் கோட்ட செங்கல்பட்டு பிரிவில் பணி செய்து வருகிறார்.

இவர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் தமிழரசி(77), சகோதரிராஜேஸ்வரி(58). தனது சகோதரிராஜேஸ்வரின் மகள் ராஜலட்சுமியை (38)திருமணம் செய்துள்ளார். ராஜலட்சுமி கடந்த 2021-ம்ஆண்டு வாலாஜாபாத் ஒன்றியத்தில் கவுன்சிலர் (திமுக) பதவிக்கு போட்டியிட்டு தேர்வானவர்.