பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்க தீயணைப்பு வீரர்கள் தயார்
பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் தீயணைப்புபடை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
சென்னை: பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து சென்று அணைக்கும் வகையில் தீயணைப்புபடை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புத்தாடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், திருவான்மியூர், பாரிமுனை உள்ளிட்ட வணிக வீதிகளில் கூட்டம் அலை மதுகிறது.
நேற்று முன்தினம் கடைசி ஞாயிறு என்பதால் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புணிகளில் ஈடுபட்டனர்.