விஜய்யின் ‘பாசிசம், பாயாசம்’ பேச்சு: இந்திய கம்யூனிஸ்ட் கடும் விமர்சனம்
அரசியல் பாதையில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதில் நடிகர் விஜய்க்கு தெளிவில்லை. ‘பாஜக பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா?’ எனக் கூறியதன் மூலம் பாசிச அபாயத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
சென்னை: அரசியல் பாதையில் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதில் நடிகர் விஜய்க்கு தெளிவில்லை. ‘பாஜக பாசிசம் எனில், நீங்கள் என்ன பாயாசமா?’ எனக் கூறியதன் மூலம் பாசிச அபாயத்தை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “சிறந்த திரைப்படக் கலைஞராக வலம் வந்த விஜய், தற்போது அரசியலில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். அரசியல் பாதை என்பது இரண்டு வகையானது. ஒன்று இடதுசாரி பாதை, மற்றொன்று வலதுசாரி பாதை. அவர் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உள்ளார் என்பது குறித்து, அவரது மாநாட்டு உரையில் தெளிவில்லை. பிளவுவாத சக்திகளை எதிர்ப்பதாகக் கூறுகின்றார். அடுத்த கணம் திமுகவை குறிவைத்து பேசுகிறார். திமுகவை மட்டுமல்ல, திமுகவுடன் தோழமை கொண்ட கட்சிகளின் மீதும் மறைமுகமாக தாக்குதலை நடத்தியுள்ளார்.