கிடப்பில் புதிய சட்டப்பேரவை கட்டிட கோப்பு: புதுச்சேரி பேரவைத் தலைவர் முதல்வரிடம் முறையீடு
ஆளுநர் ஒப்புதல் அளித்தும் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படாமல் தலைமைச்செயலகத்தில் புதிய சட்டப்பேரவை கோப்பு இருப்பதால் பேரவைத்தலைவர் அதிருப்தி அடைந்து, முதல்வரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டுள்ளார்.
புதுச்சேரி: ஆளுநர் ஒப்புதல் அளித்தும் மத்திய உள்துறைக்கு அனுப்பப்படாமல் தலைமைச் செயலகத்தில் புதிய சட்டப்பேரவை கோப்பு இருப்பதால் பேரவைத் தலைவர் அதிருப்தி அடைந்து, முதல்வரைச் சந்தித்து இது தொடர்பாக முறையிட்டுள்ளார்.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் சட்டப்பேரவை இயங்கி வருகிறது. கடற்கரைச் சாலையில் தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது. தலைமைச்செயலகத்துடன் கூடிய புதிய சட்டப்பேரவை கட்டிடத்தைக் கட்ட அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்ட அனுமதி கோரினார். அவர்களும் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப அறிவுறுத்தினர்.