குமரியில் இடைவிடாது கொட்டிய கனமழை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் உபரிநீர் திறந்துவிடப்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரியில் இடைவிடாது கொட்டிய கனமழை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் உபரிநீர் திறந்துவிடப்படலாம் என்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக, நேற்று மாலையில் இருந்து விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டியது. இன்று மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.