கொளத்தூரில் முதல்வர் படைப்பக கட்டிடம்: நவ.4-ல் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்படுகிறது.
சென்னை : சென்னை கொளத்தூர் தொகுதியில் நவ.4-ம் தேதி முதல் பகிர்ந்த பணியிடமான ‘முதல்வர் படைப்பகத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். சென்னை, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பன்னோக்கு மையத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் பகிர்ந்த பணியிடம் அமைக்கப்படுகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகளை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் கணினி கற்பதற்காக, அனிதா பெயரில் கொளத்தூரில் தொடங்கப்பட்ட மையத்தில், 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பலனடைந்துள்ளனர். இதன், 13-வது பேட்ச்சாக வரும் நவ.4-ம் தேதி அதில் பயிற்சி முடித்தவர்களுக்கு கணினி வழங்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். குறிப்பாக, 105 பேருக்கு கணினியும், 360 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்குகிறார்.