கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை
கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாட்சியரிடம் விடிய விடிய விசாரணை நடத்திய்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி: கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாட்சியரிடம் விடிய விடிய விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து திடீரென வட்டாட்சியர் அலுவலகத்தில் உதகை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பரிமளா தேவி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று (அக்.23) இரவு ஆய்வு மேற்கொண்டனர்.