கோவையில் ஒருமுறைக்கு மேல் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.10.15 லட்சம் அபராதம் வசூல்
கோவை மாநகரில் ஒருமுறைக்கு மேல் தொடர்ந்து, சாலை போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாநகரில் ஒருமுறைக்கு மேல் தொடர்ந்து, சாலை போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறையினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், கோவை மாநகரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டப்படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.