“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” - முதல்வர் ஸ்டாலின்
இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது, என்று சென்னையில் நடந்துவரும் தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: “இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது.” என்று சென்னையில் நடந்துவரும் தென்மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாடு இன்று (அக்.19) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இன்றைக்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு, சமூக வலைதளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகள் பெரும் பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கிறது. அவற்றின் மூலம் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களை நாம் பார்க்க முடியும். ஏன், தமிழ்நாட்டில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.