சர்ச்சைகளுக்கு நடுவே நடிகர் பாலா திருமணம்!

முன்னாள் மனைவியை துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு நடுவே நடிகர் பாலா தனது உறவுக்கார பெண்ணான கோகிலாவை  இன்று மணமுடித்தார். இது அவரது 3வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்ச்சைகளுக்கு நடுவே நடிகர் பாலா திருமணம்!

கொச்சி: முன்னாள் மனைவியை துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு நடுவே நடிகர் பாலா தனது உறவுக்கார பெண்ணான கோகிலாவை இன்று மணம் முடித்தார். இது அவரது 3-வது திருமணம் என கூறப்படுகிறது.

தமிழில் ‘அன்பு’, ‘காதல் கிசு கிசு’, ‘கலிங்கா’, அஜித்தின் ‘வீரம்’, ரஜினியின் ‘அண்ணாத்த’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பாலா. இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவாவின் சகோதரர். இவர், பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் அவந்திகா என்ற மகள் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக அம்ருதாவுடன் விவாகரத்து பெற்றார் பாலா. அதன் பின் கடந்த 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.