சார் review: போஸ் வெங்கட் - விமல் கூட்டணி பாஸ் ஆனதா?

‘கல்விக்கு எதிராக கடவுளே வந்தாலும் எதிர்த்து கேள்’ என்று உரக்க பேசுகிறது போஸ் வெங்கட் - விமல் கூட்டணியின் அரசியல் பாடம்.

சார் review: போஸ் வெங்கட் - விமல் கூட்டணி பாஸ் ஆனதா?

‘கல்விக்கு எதிராக கடவுளே வந்தாலும் எதிர்த்து கேள்’ என்று பேசுகிறது போஸ் வெங்கட் - விமல் கூட்டணியின் அரசியல் பாடம். சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேற கல்வி ஒன்றே ஒரே வழி என தீவிரமாக நம்புகிறார் ஆசிரியர் அண்ணாதுரை (சந்திரகுமார்). அதற்காக மாங்கொல்லை கிராமத்தில் கடும் போராட்டத்துக்குப் பின் பள்ளி ஒன்றை கட்டுகிறார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் பொன்னரசன் (சரவணன்) அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருந்து வழிநடத்துகிறார். நடுநிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நினைக்கும் பொன்னரசனுக்கு அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சக்தியினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

கடவுளின் பெயரால் பள்ளியை இடிக்க துடிக்கின்றனர். இந்த சூழலில் பொன்னரசன் மகன் சிவஞானம் (விமல்) அந்த பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்கிறார். அங்கிருக்கும் சாதிய ஆதிக்கத்தையும் மீறி, அவர் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? அதற்கு வந்த சிக்கல்கள் என்ன என்பது தான் ‘சார்’.