விஜய் தேவரகொண்டா உடன் நடிக்க ‘மம்மி’ பட வில்லனிடம் பேச்சுவார்த்தை!
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ‘மம்மி’ பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
சென்னை: விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ‘மம்மி’ பட நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.
‘ஷியாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்கரத்தியன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடங்கவுள்ளது. 1850-ம் ஆண்டு நடக்கும் கதையாக இதனை உருவாக்கியுள்ளார் ராகுல் சங்கரத்தியன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இவர் உலகளவில் பிரபலமான ‘மம்மி’ படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.