செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற முறையில் நடக்கிறதா மகப்பேறு அறுவை சிகிச்சை?

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு இரண்டாவது முறையும் ஆபரேஷன் நடக்கிறது. அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் உயிரிழப்பு வரை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற முறையில் நடக்கிறதா மகப்பேறு அறுவை சிகிச்சை?

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு இரண்டாவது முறையும் ஆபரேஷன் நடக்கிறது. அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் உயிரிழப்பு வரை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, குழந்தை பெற்ற பெண்களுக்கு, சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படு வதாகவும் இதனால், பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மேற்கண்ட சங்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம் இணைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.