சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்: காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்: காவல் ஆணையர் நடவடிக்கை

சென்னை: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜி நேற்று (நவ.13) காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உட்பட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.