தவெக மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர தடையில்லா இன்டர்நெட் வசதி!

தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன்  பகிரும் வகையில் தடையில்லா இன்டர் நெட் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் மாநாட்டு நிகழ்வுகள் உடனுக்குடன் சமூக ஊடகங்களிலும் வைரலாகும், என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தவெக மாநாட்டு நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர தடையில்லா இன்டர்நெட் வசதி!

விழுப்புரம்: தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் மாநாடு தொடர்பான போட்டோ, வீடியோக்களை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பகிரும் வகையில் தடையில்லா இன்டர்நெட் வசதி செய்யப்பட உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் மாநாட்டு நிகழ்வுகள் உடனுக்குடன் சமூக ஊடகங்களிலும் வைரலாகும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர் .இப்பணிகள் நாளை 24-ம் தேதி மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, மாநாட்டு திடலின் முகப்பிலிருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு அதில் 15 அடி உயரத்தில் 300-க்கும் மேற்பட்ட கம்பங்களில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டது.