சென்னையில் அதிகனமழை பெய்தும் நிரம்பாத ஏரிகள், குளங்கள்: கடலுக்குச் சென்ற 4 டிஎம்சி மழைநீர்
சென்னை 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் கடந்த அக்.1 முதல் 17-ம் தேதிவரை 286 மிமீ மழை கிடைத்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 91 மிமீ மழை கிடைக்கும். இப்போது வழக்கத்தை விட 214 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது.
சென்னை: சென்னை 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் கடந்த அக்.1 முதல் 17-ம் தேதிவரை 286 மிமீ மழை கிடைத்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 91 மிமீ மழை கிடைக்கும். இப்போது வழக்கத்தை விட 214 சதவீதம் அதிகமாக கிடைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி நிலவரப்படி சென்னையில் 36 மிமீ மழை மட்டுமே கிடைத்தது. இது வழக்கத்தை விட 36 சதவீதம் குறைவு.
கடந்த 15-ம் தேதி அதிகனமழை பெய்த நிலையில் எண்ணூர் கத்திவாக்கத்தில் 23 செமீ, திரு.வி.க.நகர், அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய இடங்களில் தலா 22 செமீ, மணலியில் 20 செமீ, புழல் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் தலா 18 செமீ, மாதவரத்தில்17 செமீ, ராயபுரத்தில் 16 செமீ மழை பதிவாகிஉள்ளது.