செம்பரம்பாக்கம் ஏரி ரூ.22 கோடியில் சீரமைப்பு: டெண்டர் கோரியது நீர்வளத் துறை
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளது. 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3,645 மில்லியன் கனஅடி அளவுக்கு நீரை தேக்கி வைக்க முடியும்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகாவில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. இது சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளது. 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3,645 மில்லியன் கனஅடி அளவுக்கு நீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியை ரூ.22.10 கோடியில் ஏரியை சீரமைத்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தற்போது இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதுபோல, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, பூண்டி ஏரியில் நதி அருங்காட்சியகத்துடன் கூடிய கட்டுப்பாட்டு மையம், பரங்கிமலை அலுவலகத்தில் சென்னை நதி பேரிடர் மீட்பு மையம், திருவள்ளூரில் பேரிடர் மேலாண்மை மையம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை ரூ.13.90 கோடியில் அமைக்கப்பட உள்ளன. இதற்கான மின்னணு ஒப்பந்த புள்ளிகளை நவ.11-ம் தேதி மதியம் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீர்வளத் துறை பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பொதுப்பணி திலகம் தெரிவித்துள்ளார்.