டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன் குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தில் திமுக கபட நாடகமாடுகிறது: டிடிவி தினரகன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு திமுக கபட நாடகமாடுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலையில் இன்று (டிச.22) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில்தான் அரங்கேறும். 1974-ல் கச்சதீவை முதல்வராக இருந்த கருணாநிதி தாரை வார்த்து கொடுத்ததால், இன்றளவும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்திய அரசுக்கும் தலைவலியாக இருக்கிறது. நட்புறவு நாடாக இருப்பதால், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் மீட்கப்படுகின்றனர். காவிரி ஒப்பந்தத்தையும் காலாவதியாக்கி விட்டார். டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படுகிறது.