தமிழக அரசை கண்டித்து அதிமுக நவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம்: செங்கை பதுவஞ்சேரியில் நடக்கிறது

சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அரசை கண்டித்து அதிமுக நவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம்: செங்கை பதுவஞ்சேரியில் நடக்கிறது

சென்னை: சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 520 ஏக்கர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் சுமார் 22 ஏக்கர், மதுரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாஞ்சேரி கிராமத்தில் சுமார் 58 ஏக்கர் என மொத்தம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை சிஎம்டிஏ மூலமாக திமுக அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 14-ம் தேதியிட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிட்டுள்ளது.