“தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கையே என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” - ப.சிதம்பரம்
“தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை: “தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கைதான் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிர்மறையான கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வருகிறார். மற்ற மாநிலங்களில் 3 மொழிகள் இருக்கின்றன என்பது தவறு. இந்தி பேசும் பல மாநிலங்களில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒரு மொழி மட்டுமே தெரியும். அங்கு ஒரு மொழி கொள்கை தான். ஆங்கில ஆசிரியரும் இல்லை; கற்றுத் தருவதும் கிடையாது. அவர்களுக்கு ஒரு சொற்றொடரை கூட ஆங்கிலத்தில் எழுத, பேசத் தெரியாது.