தமிழகத்தில் கைம்பெண்களுக்காக சிறப்பு நலத்திட்டங்கள்: அரசு வெளியிட்ட அறிக்கையில் பெருமிதம்
தமிழகத்தில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவையான நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கைம்பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி சிறப்பாக நடைமுறைப்படுத்துவதுடன், தேவையான நிதியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
‘இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்க பக்கத்தில் கடந்த அக்.22-ம் தேதி ‘கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. இக்கட்டுரை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பல்லாயிரக்கணக்கான பெண்கள் அதிலும் கைம்பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். சமூக பாதுகாப்பு திட்டங்களின்கீழ் உயர்த்தப்பட்ட மாதஓய்வூதியம் ரூ.1,200-ஐ இதுவரை 8 லட்சத்து 10,985 கைம்பெண்கள் பெற்று வருகின்றனர்.