தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை குறைந்ததன் காரணம் என்ன? - ஒரு பார்வை

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசு மது வகைகளை விற்பனை செய்து வருகிறது

தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை குறைந்ததன் காரணம் என்ன? - ஒரு பார்வை

சென்னை: தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசு மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண மது வகைகள் 60 சதவீதம், நடுத்தர வகை மது வகைகள் 25 சதவீதம், ப்ரீமியம் மது வகைகள் 15 சதவீதம் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.150 கோடி வருமானம் கிடைக்கிறது. இதுவே வார இறுதி நாட்களில் ரூ.200 கோடியும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கு விற்பனை நடந்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.