தமிழகம் முழுவதும் பரவலாக மழை: தினசரி மின் தேவை குறைந்தது

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: தினசரி மின் தேவை குறைந்தது

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் தினசரி சராசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர்காலத்தில் 10 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தும், கோடைக்காலத்தில் 20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். இந்த ஆண்டு கடந்த மே 2-ம் தேதியன்று தினசரி மின் தேவை 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.