“திமுக மாநாட்டுக்கு இல்லாத கட்டுப்பாடு விஜய் மாநாட்டுக்கு ஏன்?” - சீமான் கேள்வி
“சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு: “சேலத்தில் திமுக மாநாடு நடத்தும் போது கட்டுப்பாடு விதிக்கவில்லை. ஆனால் விஜய் நடத்தினால் இவ்வளவு இடையூறு செய்வது ஏன்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோட்டில் தமிழக பண்பாட்டு கண்காட்சி நடைபெற்றது. இதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட நல் திருநாடு என்று வார்த்தை நீக்கியதாக சொல்லுபவர்கள் ஆரியம் வழக்கொழிந்து உள்ளிட்ட வார்த்தைகளை தூக்கியது யாரு?. நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு எடுக்கப்படும். அதற்கு என்ன செய்வார்கள். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகம் தமிழகத்தின் நாகரிகம் என்று தான் சொல்கிறது. ஆனால் இங்கு ஆட்சியில் உள்ளவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள். ஆளுநர் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நாங்கள் கொந்தளித்தால் தான் மாற்றினார்கள் என்று சொல்வதற்கு தான் ஆளுநர் விவகாரத்தை பேசி வருகின்றனர்.