திருமுல்லைவாயல் பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அவதி!

மாடு வளர்ப்போர் ஒவ்வொரு மாட்டுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சென்னை போன்ற நெரிசல் மிக்க நகரங்களில் தங்களது வீட்டை சுற்றி பொது இடங்களிலேயே மாட்டை கட்டி வைக்கின்றனர்.

திருமுல்லைவாயல் பகுதியில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அவதி!

பொருளாதார தேவைகளுக்காக பொதுமக்கள் கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடை வளர்ப்பு என்பது செல்லப்பிராணி வளர்ப்பு போன்றதல்ல. மாடு வளர்ப்போர் ஒவ்வொரு மாட்டுக்கும் குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சென்னை போன்ற நெரிசல் மிக்க நகரங்களில் தங்களது வீட்டை சுற்றி பொது இடங்களிலேயே மாட்டை கட்டி வைக்கின்றனர். மாடுகளுக்கு ஏதுவான மேய்ச்சல் நிலம் இல்லாததாலும், மாடுகளுக்கு தீவனம் வாங்கிப்போட முடியாததாலும் மாடுகளை சாலைகளில் மேய விடுகின்றனர்.

மாடுகள் சாலைகளில் மேய்வதால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது. பல இடங்களில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் முட்டி பொதுமக்கள் காயம் அடைந்தசம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. பள்ளி சிறுமி முதல், வயதான மூதாட்டி வரை பலர் மாடுகளால் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.