தீபாவளியின்போது விதிமீறி இயக்கிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
தீபாவளி பண்டிகையின்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையின்போது விதிமீறி இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியது: தீபாவளி பண்டிகையின்போது, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் உயர்த்தி வசூலிக்க கூடாது என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.