தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கஸ்தூரியை நவ.29 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து அவர் போலீஸ் வாகனத்தில் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் வேனில் ஏறும் முன்னர் அங்கே குழுமியிருந்த ஊடகவியலாளர்களைப் பார்த்து, “அரசியல் அராஜகம் ஒழியட்டும். நீதி வெல்லட்டும்.” என்று கஸ்தூரி கோஷமிட்டார்.