தேனி: தீபாவளிக்கு கூடுதல் விலை; குடில்களில் வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்

தீபாவளிக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் சிறு குடில் அமைத்து அதில் வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

தேனி: தீபாவளிக்கு கூடுதல் விலை; குடில்களில் வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்

தேனி: தீபாவளிக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் சிறு குடில் அமைத்து அதில் வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

சைவ மற்றும் அசைவ உணவுகளில் வெங்காயம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மசாலாதன்மை மற்றும் உணவுக்கு சுவையூட்டுவதில் இதன் பங்கு அதிகம். இதனால் பல உணவுகளில் வெங்காயம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆண்டு முழுவதும் இதன் தேவை இருப்பதால் விவசாயிகள் பலரும் இவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கொடுவிலார் பட்டி, கோபாலபுரம், பாலகிருஷ்ணாபுரம், ஓவுலாபுரம், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.