கிருஷ்ணகிரி: தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

தளி அருகே  டி.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் இன்று (நவ.5) ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி: தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஸ்

ஓசூர்: தளி அருகே டி. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளியில் இன்று (நவ.5) ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், குறைகள் மற்றும் நிறைகளை கண்டறிவதற்காக 234/ 77 என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை தொடங்கி உள்ளது. இதன்படி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு பள்ளிகளில் உள்ள குறைகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன், வாசிப்பு திறன்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.